''ஜனவரி 7 பயணித்த SQ322 விமானத்தில் மைனா பறவை பயணித்தது உண்மைதான்'' என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.
Singapore: சிங்கப்பூரில் இருந்து லண்டன் சென்ற சிங்கப்பூர் ஏர்லையன்ஸ், பயணிகள் விமானத்தில் மைனா பறவை ஒன்றும் பயணம் செய்துள்ள காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
லண்டனுக்கு கிட்டத்தட்ட 14 மணி நேரம் செல்லும் விமானத்தில், மைனா பறவை பயணித்த செய்தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸில் வெளியானது.
இதற்கு பதிலளித்துள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ''ஜனவரி 7 பயணித்த SQ322 விமானத்தில் மைனா பறவை பயணித்தது உண்மைதான்'' என்று கூறியுள்ளது.
அதே விளக்கத்தில் ''அந்த பறவையை கேபின் க்ரூ உறுப்பினர்கள் பயணிகள் உதவியோடு பிடித்துவிட்டனர்'' என்று கூறியுள்ளது.
சமூக வலைதளங்களில் கேபின் க்ரூ உறுப்பினர் பறவையை பிடிக்க முயற்சிக்க, அது பறந்துவிடுவது போன்ற காட்சி பரவிவருகிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், அந்தப் பறவையை லண்டனில் விலங்குகளுக்கான இடத்தில் ஒப்படைத்துவிட்டதாகவும், அந்த பறவை எப்படி விமானத்துக்குள் வந்தது என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளது.