Viral Video: இந்த வீடியோ பகிரப்பட்டதில் இருந்து சுமார் 37,000 முறை பார்க்கப்பட்டுள்ளது.
Viral Video: பாகிஸ்தானில் இருக்கும் லாகூரின் ஆகாயத்தில் திடீரென்று ஒரு மர்ம கருப்பு நிற வளையம் தோன்றியுள்ளது. இந்த மர்ம வளையம் தோன்றிய போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வலம் வரத் தொடங்கியுள்ளன. பலரும் இந்த வளையம் எதனால் தோன்றியிருக்கும், அதன் பின்னணி காரணம் என்ன என்பது குறித்து தீவிரமாக விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்ட இது தொடர்பான வீடியோவில், கருப்பு வளையம், ஆகாயம் மார்க்கமாக மேலெழுகிறது. சிலர் இந்த வளையமானது, வேற்று கிரகவாசிகளின் விண்வெளிக் கப்பலில் இருந்து வந்திருக்கலாம் என்றும் வேறு சிலரோ, இன்னொரு பரிமாணத்துக்குச் செல்வதற்கான வெளியாக இது இருக்கும் என்றும் சந்தேகப்படுகின்றனர்.
மிரட்சியளிக்கும் வீடியோவைப் பாருங்கள்:
இந்த வீடியோ பகிரப்பட்டதில் இருந்து சுமார் 37,000 முறை பார்க்கப்பட்டுள்ளது. பல ட்விட்டர் பயனர்களும், இந்த கருப்பு வளையத்தின் பின்னணியில் ஏதோ மர்ம முடிச்சு இருக்கிறது என்று நம்புகின்றனர். சிலரோ, இதைப் போன்ற கருப்பு வளையத்தை வேறு சில இடங்களில் பார்த்ததாக வீடியோ பகிர்ந்துள்ளனர்.
ஆனால், இந்த கருப்பு வளையம் ஏன் உருவாகியிருக்கும் என்பது குறித்த ‘தி சன்' செய்தி நிறுவனம் கூறுகையில், தொழிற்சாலையில் ஏற்படும் சில சிக்கல்களால் இதைப் போன்ற கருப்பு வளையம் ஏற்படலாம் என்கிறது.
அதாவது, புகை வெளியிடும் இயந்திரங்கள், திடீரென்று புகையைக் கக்கினால் இதைப் போன்ற கருவளையம் உருவாகலாம் எனப்படுகிறது. இதைப் போன்ற வளையங்கள் இதற்கு முன்னரும் உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.
Click for more
trending news