This Article is From Jul 02, 2020

ஆப்பிரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழக்கும் யானைகள்!

யானைகளின் நரம்பியல் அமைப்புகளை ஏதேனும் தாக்கியிருக்கக்கூடும் என இங்கிலாந்தை தளமாகக் கொண்ட தேசிய பூங்கா மீட்பு நிறுவனத்தின் டாக்டர் நியால் மெக்கானை தெரிவித்ததை பிபிசி மேற்கோள் காட்டியுள்ளது.

ஆப்பிரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழக்கும் யானைகள்!

ஆப்பிரிக்காவின் குறைந்து வரும் யானைகளின் மூன்றில் ஒரு பங்கை போட்ஸ்வானா கொண்டுள்ளது

New Delhi:

ஆப்பிரிக்காவின் மூன்றில் ஒரு பங்கு யானைகளை கொண்டுள்ள  போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதக்காலங்களில் 350 க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. யானைகளின் தொடர் உயிரிழப்புகளுக்கான காரணத்தினை சூழலியலாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

உயிரிழந்துள்ள யானைகளின் உடலில் வேட்டையாடப்பட்டதற்கான அடையாளங்கள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. போட்ஸ்வானாவில் மனிதர்களை தாக்கும் வன உயிரினங்களை கொல்ல ஆந்த்ராக்ஸால் விஷம் பயன்படுத்தப்படுவதை வன உயிரியல் உயர்மட்ட விசாரணைக்குழு நிராகரித்துள்ளது என நிறுவனம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"மரணத்திற்கான சரியான காரணத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம்" என்று பிராந்திய வனவிலங்கு ஒருங்கிணைப்பாளர் டிமகாட்சோ ந்த்சேப் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

யானைகளின் நரம்பியல் அமைப்புகளை ஏதேனும் தாக்கியிருக்கக்கூடும் என இங்கிலாந்தை தளமாகக் கொண்ட தேசிய பூங்கா மீட்பு நிறுவனத்தின் டாக்டர் நியால் மெக்கானை தெரிவித்ததை பிபிசி மேற்கோள் காட்டியுள்ளது.

வேட்டையாடுதல் காரணமாக ஆப்பிரிக்காவின் ஒட்டுமொத்த யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, ஆனால் கண்டத்தின் யானைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியான போட்ஸ்வானாவில் நன்கு நிர்வகிக்கப்பட்ட இருப்புக்கள் காரணமாக யானைகளின் எண்ணிக்கையானது 1990 களின் பிற்பகுதியில் 80,000 இலிருந்து 130,000 ஆக உயர்ந்துள்ளது.

.