This Article is From Apr 27, 2019

கர்நாடக யானை முகாமில் இருந்த யானை இறந்தது

இந்த யானை 2017 மற்றும் 2018 ஆண்டில் தசராவில் பங்கேற்றுள்ளது. யானை 2.69 மீட்டர் உயரமும் 3,900 கிலோ எடையும் கொண்டது.

கர்நாடக யானை முகாமில் இருந்த யானை இறந்தது

மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

Mysuru:

கர்நாடக நாகர்ஹொலே தேசிய பூங்காவில் 37 வயதான யானை ஒன்று மரணமடைந்துள்ளது. இந்த யானை கர்நாடக தேசிய பூங்காவில் திதிமதி யானை முகாமில் இருந்த பொழுது இது நிகழ்ந்துள்ளது. யானைகள் ஆண்டு தோறும் தசரா ஊர்வலத்தில் கவுடா சுமந்து செல்லக்கூடியது.

இந்த யானை 2017 மற்றும் 2018 ஆண்டில் தசராவில் பங்கேற்றுள்ளது. யானை 2.69 மீட்டர் உயரமும் 3,900 கிலோ எடையும் கொண்டது.

யானை தண்ணீர் குடிக்க சென்றபோது திடீரென நிலைகுலைந்து சரிந்து இறந்து போனதாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலை முதல் யானை உடல் நலமின்றி இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இறப்பிற்கான காரணத்தை அறிய மருத்துவர்கள் பிரேத பரிசோதனை நடத்தி வருகின்றனர். மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

மைசூரின் தசரா நிகழ்வானது மிகப்பெரிய அளவில் நடைபெறும். சுமார் 5 கி.மீ தூரத்திலுள்ள நகரங்களிடமிருந்து தொடங்கும். யானைகள் அலங்கரிக்கப்பட்டு இருப்பது மைசூரு தசாரா நிகழ்வின் முக்கிய நிகழ்ச்சியாகும்.

.