This Article is From Dec 16, 2019

நாகாலாந்து ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மேகாலயாவின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை மத்திய அரசு எதிர்கொண்டிருப்பதால் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது.

நாகாலாந்து ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மேகாலயாவின் கூடுதல் பொறுப்பு  வழங்கப்பட்டுள்ளது

நாகா கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான மத்திய அரசின் சார்பாக பேசக்கூடியவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

New Delhi:

நாகாலாந்து ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மேகாலயாவின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டதாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகா கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான மத்திய அரசின் சார்பாக பேசக்கூடியவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேகாலயா ஆளுநரின் பணிகளை நிறைவேற்ற நாகலாந்து ஆளுநர் ஆர்.என். ரவியை நியமிப்பதில் இந்திய ஜனாதிபதி மகிழ்ச்சியடைகிறார். மேகாலயாவின் ஆளுநரான தாதாகத  ராய் சொந்த வேலையின் பொருட்டு விடுப்பில் செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை மத்திய அரசு எதிர்கொண்டிருப்பதால் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. 

.