இந்த சம்பவம் நல்கொண்டா மாவட்டத்தில் நம்பள்ளி என்ற காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. (Representational)
Nalgonda, Telangana: தெலுங்கானாவின் நல்கொண்டாவில் 26 வயது தனது மைத்துனரை இரண்டு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் நல்கொண்டா மாவட்டத்தில் நம்பள்ளி என்ற காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது.
26 வயதான சதாம் அவரின் இரு மைத்துனர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று சரணடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் கூடுதல் விசாரணை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இறந்தவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.