This Article is From Jul 21, 2020

சிறையில் நளினி தற்கொலை முயற்சியா? மறுக்கும் சிறைத் துறை அதிகாரிகள்!!

சிறை அதிகாரிகள் நளினியை துன்புறுத்தியதாகவும், எனவே வேறு சிறைக்கு நளினியை மாற்ற வேண்டும் என்றும் தமிழக அரசிற்கு புகழேந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

சிறையில் நளினி தற்கொலை முயற்சியா? மறுக்கும் சிறைத் துறை அதிகாரிகள்!!

கடந்த ஆண்டு, நளினிக்கு மகளின் திருமணத்திற்காக ஒரு மாதத்திற்கு பரோல் வழங்கப்பட்டது.

ஹைலைட்ஸ்

  • பிளாக் மெயில் சம்பவம் போன்ற ஒன்று. அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை
  • அதிகாரிகள் நளினியை துன்புறுத்தியுள்ளனர், எனவே வேறு சிறைக்கு மாற்ற வேண்டும
  • விசாரணையின் போது, ​​ஜெயிலருக்கும் நளினிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது
Chennai:

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி நேற்று இரவு மற்றொரு குற்றவாளியை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர் தற்கொலைக்கு முயன்றதாக தமிழக உயர் அதிகாரி ஒருவர் தற்போது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், “இது பிளாக் மெயில் சம்பவம் போன்ற ஒன்று. அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை.” என தமிழக சிறைத்துறைத் தலைவர் சுனில் குமார் சிங் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“சிறையில் நளினியுடன் இருந்த மற்றொரு கைதியை நளினி துன்புறுத்தியதாக புகாரளித்திருந்தார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட கைது மற்றொரு சிறைக்கு மாற்றப்பட்டால் தான் தற்கொலை செய்துக்கொள்ளப்பபோவதாக நளினி மிரட்டியிருந்தார்.” என சுனில் குமார் சிங் கூறியுள்ளார்.

ஆனால், நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி, “சிறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் நளினி தற்கொலைக்கு முயன்றதாக” ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறை அதிகாரிகள் நளினியை துன்புறுத்தியதாகவும், எனவே வேறு சிறைக்கு நளினியை மாற்ற வேண்டும் என்றும் தமிழக அரசிற்கு புகழேந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

“இரவு 8:30 மணியளவில், ஜெயிலர் நளினியின் சிறைக்கு சென்று புகார் குறித்து விசாரித்தார். விசாரணையின் போது, ​​ஜெயிலருக்கும் நளினிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. எனவே நளினி வருத்தமடைந்து தற்கொலைக்கு முயன்றார்.” என புகழேந்தி கூறியுள்ளார். மேலும், “இவ்வாறு சிறை அதிகாரிகளால் கூறப்படுகிறது. ஆனால், நாங்கள் இதை நம்பவில்லை. அவர் கடந்த 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துள்ளார். இக்காலக்கட்டங்களில் அவர் தற்கொலைக்கு முயலவில்லை. சிறை அதிகாரிகள் நளினியை சித்திரவதை செய்ததாக நான் நினைக்கிறேன். எனவே இது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.” என புகழேந்தி கூறியுள்ளார்.

இந்நிலையில் நளினியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி வழக்கறிஞர் புகழேந்தி, நளினியை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என சிறை அதிகாரிகள் மற்றும் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ல் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பேரணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுவெடிப்பால் படுகொலை செய்யப்பட்டதற்காக நளினி மற்றும் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு, மகள் ஹரித்ராவின் திருமணத்திற்காக நளினிக்கு ஒரு மாதத்திற்கு பரோல் வழங்கப்பட்டது. அவரது மகள் இங்கிலாந்தில் மருத்துவம் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

.