This Article is From Jan 03, 2019

திருவாரூர் இடைத்தேர்தலில் தனித்துப்போட்டியா? சீமான் பேட்டி

திருவாரூர் இடைத்தேர்தலில் தனித்துப்போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் இடைத்தேர்தலில் தனித்துப்போட்டியா? சீமான் பேட்டி

திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி, கடந்த ஆக.7 ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, அவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து, கலைஞரின் மறைவு குறித்து சட்டப்பேரவை அலுவலகத்துக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக தேர்தல் துறைக்கு கலைஞரின் திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை அலுவலகம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் 28 ஆம் தேதி அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமைத்தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை 30 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 10ம் தேதி வரை நடக்கயிருக்கிறது.

இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தேசிய மற்றும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில்லை என்று ஏற்கனவே கூறியுள்ளோம்.

ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் தேர்தலை எதிர்கொள்வார்களா? பின்னர் எதற்கு வலிமை குறித்து பேச வேண்டும். எத்தனை கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு ஓட்டுக்கு பணம் கொடுத்து தானே தேர்தலை எதிர்கொள்கிறீர்கள்? நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம் என்றார்.

.