Mumbai: உத்தர பிரதேச மாநிலத்தில் சமீப காலமாக நடந்து வரும் தொடர் பெயர் மாற்றங்களை பின்தொடரும் வகையில், மும்பை நகரத்தில் புதிதாக கட்டமைக்கப்பட்டு வரும் மும்பை - நாக்பூர் சம்ருதி போக்குவரத்து வழித்தடத்திற்க்கு சிவ சேனா கட்சியின் முன்னாள் தலைவரான பால் தாக்ரேவின் பெயரை வைக்க வேண்டும் என முதல்வர் தேவேந்திரா ஃபட்நாவிஸிடம் சிவ சேனா பிரதிநிகளின் குழு கடந்த திங்களன்று மனு அளித்தது.
சுமார் 49,250 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த விரைவுவழிச்சாலை தொடர்பு வழி போக்குவரத்து வழித்தடம் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. சுமார் 700 கிலோமீட்டர் நீளம் கட்டப்பட்டு வரும் இந்த எஃக்ஸ்பிரஸ் வழித்தடம் 392 கிராமங்களையும் 11 மாவட்டங்களையும் இணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவசேனா சட்டமன்ற உறுப்பினரான சுனில் பிரபு, செய்தியாளர்களிடம் பேசிய போது ‘மும்பை - புனே விரைவுச்சாலை சிவ சேனா - பாஜக கூட்டணி ஆட்சியின் போது நிறுவப்பட்டது, அதே நட்புக்கட்சிகளின் ஆட்சியில் இருக்கும் போதே மும்பை - நாக்பூர் சம்ருதி போக்குவரத்து விரைவுச்சாலை அமைவது நல்லது' எனத் தெரிவித்தார்.
மேலும், அவர் ‘மும்பை- புனே விரைவுச்சாலை நிறுவப்பட்ட பொழுது மாநிலத்தின் முதல் முதலமைச்சரான யஷ்வன்டாராவ் சாவானின் பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் மாநிலத்தின் பொருளாதாரத்தையே மாற்றியமைக்கும் இந்த திட்டத்திற்கு தலைவர் பால் தாக்ரேவின் பெயரை சூட்ட வேண்டும்' எனத் தெரிவித்தார்.
மனு அளித்துள்ள இந்த குழுவில் தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய், போக்குவரத்துதுறை அமைச்சர் திவாக்கர் ராவ்ட்டே, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ராம்தாஸ் காதாம், சுகாதாரத்துறை அமைச்சர் தீபக் சாவான்த், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷின்டே மற்றும் அமைச்சர்கள் ராவிந்தரா வைய்கார், தாதாஜி பூசே, தீபக் கேசார்கார், குலாப்ராவ் பாட்டில், விஜய் ஷிவ்தாரே மற்றும் அர்ஜுன் கோட்கார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.