This Article is From Jan 28, 2019

பாஜக-வில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை..!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் பாஜக வில் இணைந்தார் இஷா கோப்பிகார்.

நரசிம்மா, என் சுவாச காற்றே முதலிய படங்களில் நடித்திருந்தார் இஷா

Mumbai:

பாலிவுட் நடிகை இஷா கோப்பிகார், பாஜக கட்சியில் இணைந்துள்ளார். அவர் பாஜக கட்சியின் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் பெண்கள் போக்குவரத்துப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1998 ஆம் ஆண்டு தமிழ் படமான காதல் கவிதை படத்தில் நடித்தார் இஷா. இந்த படத்திற்காக பிலிம்பேர் விருதையும் வென்றார். என் சுவாச காற்றே, நரசிம்மா முதலிய தமிழ் படங்களில் நடித்த இஷா, 2000 ஆம் ஆண்டு ஹிரித்திக் ரோசனுக்கு ஜோடியாக ஃபிசா படத்தில் நடித்தது மூலம் பாலிவுட் உலகில் அறிமுகம் ஆனார் இஷா.

 

 

இந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் பாஜக வில் இணைந்தார் இஷா கோப்பிகார்.

முன்னதாக, நடிகர் நடிகைகள் அரசியலுக்கு வருவதை விமர்சித்திருந்தார் பாஜக கட்சியை சேர்ந்த கைலாஷ் விஜய்வர்கையா. அவர், ‘காங்கிரஸ் கட்சி போப்பாலில் கரினா கபூரையும் இந்தோரில் சல்மான் கானையும் லோக் சபா தேர்தலுக்கு வேட்பாளராக அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சாக்லேட் முகம் உடையவர்களால் அரசியலில் என்ன செய்ய முடியும்' என விமர்ச்சித்திருந்தார்.

இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

பாஜக கட்சியில் இணைந்ததை குறித்து இஷா, ‘என்னை கட்சியில் இணைத்ததிற்கு நன்றி. நாட்டிற்கு சேவை செய்ய நான் ஆவலுடன் உள்ளேன்' என ட்வீட் செய்திருந்தார்.

.