மோடியின் இளம் வயது போட்டோ லைக்குகளை அள்ளி வருகிறது.
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்த நாளான இன்று இளம் வயது போட்டோக்களை தனது சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தனது 69-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். அவருக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்த நாளையொட்டி தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு மோடி சென்றார்.
அங்கு தனது தாயாரான 98 வயது ஹீராபென்னை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அவருடன் மதிய உணவை மோடி பகிர்ந்து கொண்டார். இதுதொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இந்த நிலையில், தனது இளம் வயது போட்டோக்களை பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது லைக்குகளை ஆயிரக்கணக்கில் குவித்து வருகிறது.
பிறந்த நாளான இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்றார். சர்தார் சரோவர் அணை மற்றும் படேலின் ஒற்றுமை சிலைக்கு சென்ற அவர், அதனை பார்வையிட்டார்.