Read in English
This Article is From May 31, 2019

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட சினிமா பிரபலங்கள்

சுமார் 8,000 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது தாயார் சோனியா காந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Advertisement
இந்தியா Edited by

PM Modi swearing-in ceremony: சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

New Delhi:

நேற்று ராஷ்டிரபதி பவனில் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவின் போது நாட்டின் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த், கங்கணா ராணவத், கரண் ஜோஹர், அனுபீர் கேர், ஷாகித் கபூர், போனி கபூர், ஜிதேந்திரா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். திரைப்படத் தாயரிப்பாளர் ஆனந்த் எல் ராய், சஞ்சன் சிங் ராஜ்புத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கங்கண ராணவத்

பிரதமர் மோடிக்கு என் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.  எங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் கனவான ஐந்து டிரில்லியன் பொருளாதாரத்தை உருவாக்கிற கனவு விரைவில் நிறைவேறும் என்று தெரிவித்திருந்தார்.

Advertisement

நாங்கள் அவரின் முன்னால் இருக்கிறோம். அவருடைய இலக்குகளை அடைவதற்கு எங்களின் ஆதரவை நிச்சயம் தருவோம். இந்திய மக்களால் அதிகளவு விரும்பப்படுகிற, பாராட்டப்படுகிறவர்களில் நிச்சயமாக மோடி இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

அனுபம் கேர்

Advertisement

மக்கள் மோடியின் அரசாங்கத்தை தேர்வு செய்துள்ளனர். நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடக் கூடியவர். இந்த வரலாற்று தருணத்தில் ஒரு பகுதியாக நான் சாட்சியாக இருப்பது பெருமையாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.

போனி கபூர்

Advertisement

இது வெற்றியின் கொண்டாட்டம். இது ஜனநாயகத்தின் கொண்டாட்டம். நல்லது நடந்ததோ அது இனி தொடர்ந்து நடக்கும் என்று போனி கபூர் தெரிவித்தார்.

Advertisement

ஜிதேந்திரா

ஜிதேந்திரா இந்த விழாவை வரலாற்றுத் தருணம் என்று அழைத்தார். நான் மோடியை பின்பற்றக்கூடியவன். நான் மோடியின் ரசிகனுக் கூட, என் மக்களுக்காக மகிழ்ச்சியாக இருக்கிறேன். இங்கு இருப்பதை எண்ணி மகிழ்கிறேன் என்று தெரிவித்தார்.  

ராஜ்குமார் ஹிரானி, ரஜினிகாந்த், ஆனந்த் ராய், கரன் ஜோஹர், சுசந்த் சிங் ராஜ்புத் திவ்யா கோஸ்லா குமார், காஜல் அகர்வால், மங்கேஷ் ஹடாவால் மற்றும் அபிஷேக் அக்பூர் ஆகியோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். 10,000 காவல்துறை அதிகாரிகளும் போக்குவரத்து துறை அதிகாரிகளும் டெல்லியில் பணியாற்றினர்.  சுமார் 8,000 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது தாயார் சோனியா காந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Advertisement