This Article is From May 30, 2019

8 ஆயிரம்பேர் முன்னிலையில் பிரதமராக மோடி பதவியேற்றுக் கொண்டார்! அமித் ஷாவுக்கு அமைச்சர் பொறுப்பு

பாஜக தலைவர் அமித் ஷாவும் மத்திய அமைச்சர் ஆனார். மத்திய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. 

8 ஆயிரம்பேர் முன்னிலையில் பிரதமராக மோடி பதவியேற்றுக் கொண்டார்! அமித் ஷாவுக்கு அமைச்சர் பொறுப்பு

பிரதமராக பதவி ஏற்று கொண்டார் மோடி

New Delhi:

 உலக தலைவர்கள், முக்கியஸ்தர்கள், பிரபலங்கள் உட்பட 8000 பேர் முன்னிலையில் இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி.  

'மோடி, மோடி' என்ற ஆரவாரத்திற்கு இடையே பதவியேற்றார் மோடி.

பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய அமைச்சராக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்றுக் கொண்டார். 

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரிக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலாகா இன்னும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 

பாஜக தலைவர் அமித் ஷாவும் மத்திய அமைச்சர் ஆனார். மத்திய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. 

மக்களவை தேர்தலில் பாஜக மட்டுமே 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் பதவியேற்பு விழா இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. 

அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் என சுமார் 8 ஆயிரம் பேர் முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. 
 

கடந்த முறை நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லிக்கு மோடியின் அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தன்னை அமைச்சரவையில் இணைக்க கூடாது என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

.