பிரதமர் மோடி பெரும் இரண்டாவது சர்வதேச விருதாகும்.
New Delhi: ரஷ்யாவிற்கு இந்தியாவிற்கும் இடையேயான உறவை வலுப்படுத்த சிறப்பாக செயல்பட்டதற்காக, ரஷ்யாவின் மிக உயர்ந்த விருதான ‘புனித ஆண்ட்ரு' விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதற்கான ஆணையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று கையெழுத்திட்டார் என ரஷ்ய தூதரகம் தனது டிவிட்டர் பதிவில் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள அந்த பதிவில், ரஷ்ய மற்றும் இந்திய மக்களுக்கும் இடையே நட்புறவு மற்றும் சிறப்பு உறவுகளை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டதற்காக, ரஷ்யாவின் மிக உயர்ந்த விருதான, ‘செயின்ட் ஆன்ட்ரு அப்போஸ்தலர்' விருதுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் பிரதமர் மோடி பெறும் இரண்டாவது விருதாகும். முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகமும் அந்நாட்டின் உயரிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியது. இருதரப்புக்கும் இடையே ராணுவ உறவுகளை உத்வேகப்படுத்தியவர் மோடி என்று புகழாரம் சூட்டிய ஐக்கிய அரபு அமீரகம், அவருக்கு அந்நாட்டின் உயரிய 'சயீத்' விருதை அளித்தது.
ரஷ்யாவில், 1698-ம் ஆண்டில் அந்நாட்டுக்கு மிகச்சிறப்பான சேவை செய்பவர்களை கவுரவிக்கும் வகையில் ‘செயின்ட் ஆன்ட்ரு அப்போஸ்தலர்' விருது உருவாக்கப்பட்டது.