Read in English
This Article is From Sep 03, 2020

பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது!

டுவிட்டர் நிர்வாகம் சார்பில், இந்த செய்தி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி வருவதாகவும் டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Posted by (with inputs from Reuters)
New Delhi:

பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் தனிப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.narendramodi.in ஆகும். இந்த இணையதளத்துடன் இணைப்பு பெற்ற பிரதமரின் சொந்த டுவிட்டர் பக்கம் @narendramodi_in என்ற பெயரில் உள்ளது. இதில் சுமார் 2.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர். கடந்த மே 2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த டுவிட்டர் கணக்கில், இதுவரையில் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டுவிட்கள் பதிவிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்று (செப் 3) காலை பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. அதில், 'கொரோனா வைரஸ் நிவாரணத்திற்கு, கிரிப்டோ கரண்சி மூலம் பிரதமர்  நிதித்திட்டத்தில் பணம் அனுப்புங்கள்' என்று ஹேக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் இன்று காலை முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டுவிட்டர் நிர்வாகம் சார்பில், இந்த செய்தி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி வருவதாகவும் டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement