Read in English বাংলায় পড়ুন
This Article is From May 12, 2019

“அன்புதாங்க ஜெயிக்கும்…”- வாக்களித்த பின்னர் மோடியை சீண்டிய ராகுல் காந்தி

Lok Sabha Elections 2019: ராகுல் காந்தி இந்தத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

மத்திய டெல்லியில் இருக்கும் ஒரு வாக்குச்சாவடியில் இன்று காலை தனது வாக்கினைப் பதிவு செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இன்று 59 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான 6வது கட்ட தேர்தல் நடந்து வருகிறது. 

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல், “இந்த முறை நல்ல போட்டியாகத்தான் இருக்கிறது. நரேந்திர மோடி, வெறுப்பை முன் வைத்துப் பிரசாரம் மேற்கொண்டார். நான் அன்பை முன் வைத்துப் பேசினேன். அன்புதான் இறுதியில் வெல்லும். மக்கள்தான் எங்களது முதலாளிகள். மக்கள் எந்தத் தீர்ப்பு கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்வோம்” என்று கூறினார். 

மத்திய டெல்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அஜெய் மாக்கன் போட்டியிடுகிறார். அவரும் ராகுல் காந்தியுடன் இருந்தார். 

ராகுல் காந்தி மேலும் பேசுகையில், “இந்தத் தேர்தல் நான்கு விஷயங்களை முன் வைத்துதான் நடக்கிறது. அது மக்களுக்கான காரணிகள். அதில் மிக முக்கியமான விஷயம், வேலைவாய்ப்பின்மை. அதையடுத்து, விவசாயிகளின் நிலைமை, பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரிமுறை, மூன்றாவது ஊழல். கடைசி விஷயம் ரஃபேல் விவகாரம்” என்றார். 

மத்திய டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் எம்.பி-யாக இருக்கும் மீனாக்‌ஷி லேகி மற்றும் அஜெய் மாக்கன் இடையில் போட்டியிருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். 

Advertisement

ராகுல் காந்தி வாக்களித்துவிட்டு சென்றதைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் வாக்களித்தார். சோனியா காந்தி, இன்னொரு வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். 

ராகுல் காந்தி இந்தத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். காந்தி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான உத்தர பிரதேச அமேதி தொகுதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிட்டார். 

Advertisement

அமேதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ராகுலை எதிர்த்து களம் கண்டார். 2014 ஆம் ஆண்டும் அவர் ராகுலை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Advertisement