This Article is From Jul 21, 2018

சூரிய ஒளிவட்டங்களை ஆய்வு செய்ய நாசா திட்டம்!

'தி பார்க்கர் சோலார் ப்ரோப்' என்ற ரோபோட்டிக் விண்கலம் சூரிய ஒளி வட்டங்களை ஆய்வு செய்ய உள்ளதாக நாசா அறிவுத்துள்ளது

சூரிய ஒளிவட்டங்களை ஆய்வு செய்ய நாசா திட்டம்!
Cape Canaveral, Florida:

ப்ளோரிடா: 'தி பார்க்கர் சோலார் ப்ரோப்' என்ற ரோபோட்டிக் விண்கலம் சூரிய ஒளி வட்டங்களை ஆய்வு செய்ய உள்ளதாக நாசா அறிவுத்துள்ளது. காரின் அளவு கொண்ட இந்த விண்கலம், சோலார் மண்டலங்களில் இருந்து 6.1 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பயணித்து, சூரிய ஒளிவட்டத்தை ஆய்வு செய்ய உள்ளது

ப்ளோரிடா  மாகாணம், கேப் கானவரெல் ஆய்வு தளத்தில் இருந்து ஆகஸ்டு மாதம் 6 - ஆம் தேதி தி பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலம் செலுத்தப்பட உள்ளது.  "இதற்கு முன்பு, எந்த விண்கலமும் அடையாத தூரத்திற்கு, பார்க்கர் செல்ல உள்ளது. இந்த விண்கலத்தின் செயல்பாட்டை எதிர்நோக்கி உள்ளோம்" என்று நிக்கோலா பாக்ஸ் என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

காற்று மூலம் பூமியில் உள்ள காந்த சக்திகளில் மாற்றத்தை ஏற்படுகின்றன. இதனால், பூமியில் உள்ள தொடர்பு சார்ந்த தொழில்நுட்பத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது என ஆய்வில் கண்டறியப்படுள்ளது. அதனால் சூரிய ஒளிவட்டத்தில் இருந்து வெளியேறும் காற்று குறித்து ஆய்வு செய்யவும், தகவல் சேகரிக்கவும் பார்க்கர் விண்கலம் செலுத்தப்பட உள்ளது. நாசாவின் 'லிவிங் வித் ஸ்டார்' அமைப்பின் கீழ், 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அமெரிக்க சோலார் வான் அறிவியலாளர் யூஜீன் நியூமான் பார்க்கர் அவர்களின் நினைவாக, விண்கலத்திற்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.  85 டிகிரி பேரன்ஹீட் வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் கொண்டதாக இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது என நாசா தெரிவித்துள்ளது

இதற்கு முன்பு, 1976 ஆம் ஆண்டு செலுத்தப்பட்ட ஹீலியோஸ் என்ற விண்கலம்,  சூரிய ஒளிவட்டத்தின் 43 மில்லியன் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ததே அருகாமையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.