This Article is From Feb 28, 2019

'விண்வெளியின் வானிலை என்ன?'- விடையைத் தேடி நாசாவின் புதிய ஆராய்ச்சி

இந்த ஆராய்ச்சிக்காக சன்ரைஸ் என்னும் பெரிய ரேடியோ தொலைநோக்கியை பயன்படுத்த உள்ளனர்.

'விண்வெளியின் வானிலை என்ன?'- விடையைத் தேடி நாசாவின் புதிய ஆராய்ச்சி

விண்வெளி வானிலை குறித்து விரிவான ஆராய்ச்சியை இது மேற்கொள்ளும்

Washington:

அறிவியல் துறை எவ்வளவு வளர்ச்சியடைதிருந்தாலும் சில கேள்விகளுக்கு விடை கிட்டியதில்லை. அப்படிப்பட்ட கேள்விதான் ‘விண்வெளியின் வானிலை என்ன?' என்பது.

இந்தக் கேள்விக்கு தக்க பதிலை அறிய, நாசா புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அட்மாஸ்பெரிக் வேவ்ஸ் எக்ஸ்ப்ரிமன்ட் (Atmospheric Waves Experiment) என பெயரிடப்பட்டுள்ள அந்த நாசா ஆராய்ச்சிக்கு, 42 மில்லியன் டாலர் செலவிடப்பட உள்ளது.

பூமியின் வெளி மண்டலத்தில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏ.டபில்யூ.இ இணைக்கப்பட உள்ளது. பூமியைச் சுற்றியுள்ள வண்ண பேண்டுகளான ஏர்குலோ என கூறப்படுவதை ஆராய்ச்சி செய்யும். இந்தத் திட்டம் 2022 ஆம் ஆண்டு துவங்க உள்ளது.

விண்வெளியின் வானிலை என்பது அதீத முக்கியத்துவம் பெற்றது. விண்வெளியின் சூழ்நிலையைத் தீர்மானிப்பதில் இருந்து விண்வெளி வீரர்களின் நிலையை தீர்மானிப்பதும் இந்த ஏர்குலோ தான்.

இந்த ஆராய்ச்சிக்காக சன்ரைஸ் என்னும் பெரிய ரேடியோ தொலைநோக்கியை பயன்படுத்த உள்ளனர்.

‘இந்த ஆராய்ச்சி விண்வெளி வானிலை குறித்தான பல கேள்விகளுக்கு பதிலளிக்கும். மேலும் இது குறைந்த செலவில் க்ரியேட்டிவ் அம்சங்களுடன் செய்யப்படும் ஆராய்ச்சி' என நாசாவின் பால் ஹேர்ட்ச் தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க - சந்திராயன் மூலம் நிலாவில் உள்ள உறைந்த நீரை உறுதி செய்த நாசா: 10 ஃபேக்ட்ஸ்



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.