This Article is From Apr 19, 2019

அனைத்து எமர்ஜென்சிக்கும் ஒரே நம்பர்! 20 மாநிலங்கள் சேவையில் இணைந்தன!!

112 என்பது ஒருங்கணைக்கப்பட்ட சேவை எண்ணக செயல்படும். இதில் போலீசுக்கு 100, தீயணைப்புக்கு 101 மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு 1090 ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் இந்த சேவை செயல்படுத்தப்படுகிறது.

அனைத்து எமர்ஜென்சிக்கும் ஒரே நம்பர்! 20 மாநிலங்கள் சேவையில் இணைந்தன!!

அமெரிக்காவில் 911 என்ற அவசர அழைப்பு எண் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

New Delhi:

இந்தியாவின் அவசர அழைப்பு எண் 112 சேவையில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்பட மொத்தம் 20 மாநிலங்கள் இணைந்துள்ளன. இது ஒருங்கிணைக்கப்பட்ட சேவையாக செயல்படும். 

தனிநபர் ஒருவருக்கு அவசர சேவை தேவைப்படும்போது 112 என்ற எண்ணை அழைக்கலாம். இதன் மூலம் போலீசுக்கு 100, தீயணைப்புக்கு 101 மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு 1090 ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் இந்த சேவை செயல்படுத்தப்படுகிறது. 

அமெரிக்காவில் 911 என்ற அவசர அழைப்பு எண் சேவை நடைமுறையில் உள்ளது. அதுபோன்று இந்த சேவை அமல்படுத்தப்படுகிறது. 

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இமாச்சல பிரதேசம், அருணாசல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, குஜராத், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான நிகோபர் தீவுகள், தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையு, ஜம்மு காஷ்மீர் மற்றும் நாகலாந்து உள்ளிட்டவை அவசர அழைப்பு எண் 112-ல் இணைந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜி.பி.எஸ். வசதி கொண்ட ஸ்மார்ட் போனில் இருந்து ஒருவர் அழைக்கும்போது, ஜிபிஎஸ்-ஐ ஆன் செய்திருந்தால் அவர் எங்கிருக்கிறார் என்பதை சேவை மையத்தில் உள்ளவர்கள் அறிந்து கொள்ள முடியும். 

இந்த சேவைக்காக மொத்தம் ரூ. 322 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2012-ல் நடந்த டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தை தொடர்ந்த இந்த சேவை தொடங்கப்பட்டு தற்போது விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

.