This Article is From Dec 14, 2019

ஜம்மு காஷ்மீரில் பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் மேலும் 3 மாதம் நீட்டிப்பு!!

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்காக அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் மேலும் 3 மாதம் நீட்டிப்பு!!

பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

Srinagar:

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மேலும் 3 மாதங்களுக்கு வீட்டுச் சிறையில் இருப்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது, அங்கு 3 முறை முதல்வராக பொறுப்பில் இருந்தவர் பரூக் அப்துல்லா. 

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி மத்திய அரசு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இதன்பின்னர் மாநிலம் காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. 

இந்த சூழலில் பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்கள். 

இந்த சட்டத்தின் அடிப்படையில் ஒருவரை 2 ஆண்டுகள் எந்த வித விசாரணையும் இன்றி சிறையில் வைக்க முடியும். இந்த நிலையில், பரூக் அப்துல்லாவின் வீட்டுக் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பொதுவாக பெரும் குற்றவாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் இந்த சட்டம் முதன்முறையாக அரசியல் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், காஷ்மீரில் 3 முறை முதல்வராக இருந்தவருமான பரூக் அப்துல்லா மீது பாய்ந்துள்ளது. 

முன்பு மரக்கட்டைகளை கடத்துபவர்களுக்கு எதிராக பரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லா பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தை கடந்த 1978-ல் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

.