Read in English
This Article is From Dec 06, 2019

நிபா நோயாளிக்கு சிகிச்சையளித்து உயிரிழந்த செவிலியருக்கு ஃபுளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது!

National Florence Nightingale Award 2019: நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்த கேரள செவிலியர் லினிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் அதனை செவிலியரின் கணவர் சஜீஷ் பெற்றுக்கொண்டார்.

Advertisement
இந்தியா Edited by

டந்த வருடம் கேரளா செவிலியர் லினி நிபா நோயாளிக்கு சிகிச்சை அளித்து உயிரிழந்தார்.

New Delhi:

நிபா வைரசால் தாக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சையளித்து உயிரிழந்த கேரள செவிலியருக்கு புளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கப்பட்டுள்ளது. 

இந்த விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவிலியர் நேற்றைய தினம் வழங்கினார். இதனை லினியின் கணவர் சஜீஷ் பெற்றுக்கொண்டார். 

மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் ஃபுளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சுகாதாரத் துறையில் சிறப்பாக சேவையாற்றிய 36 செவிலியர்களுக்கு விருது வழங்கினார். 
 


தொடர்ந்து, விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது, உலகத்தில் கருணையும், இரக்கமும் அதிகமாகத் தேவைப்படுகிறது. சேவையின் அடையாளமாக செவிலியர்கள் உள்ளனர். செவிலியர்களின் சேவையினாலும், அா்ப்பணிப்பு உணர்வினாலும் நாடே பெருமை கொள்கிறது என்றார்.

கடந்த ஆண்டு கேரளாவில் நிபா வைரஸ் தொற்று அதிகம் பரவியிருந்த காலகட்டத்தில் அதன் பாதிப்பு ஏற்பட்டிருந்த நோயாளி ஒருவருக்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர் லினி, சிகிச்சை அளித்தார். இதைத்தொடர்ந்து, அதே வைரஸ் அவருக்கும் தொற்றி உயிரிழந்தார். 
 

Advertisement
Advertisement