This Article is From Aug 31, 2019

மத்திய அரசில் இணை செயலர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதில் தனியார் துறையினர் நியமனம்!!

சிவில் சர்வீசஸ் (IAS, IPS, IRS Civil services) தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளாக இருப்பவர்கள் மட்டுமே இணை செயலர்களாக நியமிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த முறையை கடந்த ஜூனில் மாற்றி மத்திய பணியாளர் நலத்துறை அறிவிப்பு வெளியிட்டது.

மத்திய அரசில் இணை செயலர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதில் தனியார் துறையினர் நியமனம்!!

மோடி தலைமையிலான நியமன குழு ஒப்புதல் அளித்திருக்கிறது.

New Delhi:

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளுக்கு பதிலாக தனியார் துறை வல்லுனர்களை இணை செயலர்களாக மோடி நியமித்துள்ளார். மொத்தம் 9 வல்லுனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான நியமனக் கமிட்டி ஒப்புதல் அளித்திருக்கிறது. 

தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் தனியார் துறை வல்லுனர்கள், மத்திய அரசின் இணை செயலர்களாக 3 ஆண்டுகள் பொறுப்பில் இருப்பார்கள். பின்னர் அடுத்த உத்தரவு வரும்போது, அவர்கள் பதவியில் நீடிக்கப்படலாம் அல்லது நீக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

7-வது ஊதிய கமிஷன் அடிப்படையில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். மோடியின் நியமனப்படி பல்வேறு தனியார் நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருந்த ககோலி கோஷ் வேளாண் துறையிலும், அம்பர் துபே விமானப்போக்குவரத்து துறையிலும், அருண் கோயல் வர்த்தக துறையிலும், ராஜிவ் சக்சேனா பொருளாதார விவகாரத்துறையிலும், சுஜித் குமார் பாஜ்பாய் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையிலும் இணை செயலர்களாக இருப்பார்கள். 

இதேபோன்று நிதி விவகாரங்கள் துறையில் சவுரப் மிஷ்ரா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தினேஷ் தயானந்த் ஜக்தாலே, சாலைப் போக்குவரத்து துறையில் சுமன் பிரசாத் சிங், கப்பல் போக்குவரத்து துறையில் பூஷன் குமார் ஆகியோர் இணை செயலர்களாக பொறுப்பு ஏற்கின்றனர். 

சிவில் சர்வீசஸ் (IAS, IPS, IRS Civil services) தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளாக இருப்பவர்கள் மட்டுமே இணை செயலர்களாக நியமிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த முறையை கடந்த ஜூனில் மாற்றி மத்திய பணியாளர் நலத்துறை அறிவிப்பு வெளியிட்டது. 

இதன்பின்னர் அதிகாரிகள் நியமனத்தில் மேற்கொள்ளப்படும் முக்கிய மாற்றமாக, இணை செயலர்கள் நியமனம் பார்க்கப்படுகிறது. 
 
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.