கள்ள நோட்டுகளின் மதிப்பு ரூ. 1.20 கோடியாகும். (Representational)
New Delhi: தேசிய புலனாய்வு முகமை கள்ள நோட்டு கும்பலைக் கைது செய்துள்ளது. டெல்லி , ஹரியானா, மற்றும் உத்திர பிரதேசத்தில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
நம்பகமான தகவலை அடிப்படையாகக் கொண்டு ஹரியனா மாநிலம் குருகிராமில் 1.20 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போலி ரூபாய் நோட்டுகள் அனைத்தும் 2,000 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கள்ள நோட்டுகளின் மதிப்பு ரூ. 1.20 கோடியாகும்.
கைது செய்யப்பட்ட காசிம் மற்றும் வாசிம் இருவரும் மேவாட் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பறிமுதல் செய்யப்பட்ட நோட்டுகள் அனைத்தும் உள்ளூர் காவல்துறையிடம் ஒப்பட்டைக்கப்பட்டுள்ளது.