This Article is From Feb 28, 2020

தேசிய அறிவியல் தினம் இன்று! மகளிரின் பங்களிப்பைப் பெருமைப்படுத்தும் நிகழ்ச்சிகள்!!

Science Day: கடந்த 1986-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம்தேதி தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisement
இந்தியா Edited by

நடப்பாண்டில், 'அறிவியலில் மகளிரின் பங்கு' என்பது, தேசிய அறிவியல் தினத்தின் மையக் கருத்தாக உள்ளது.

Highlights

  • அறிவியலில் பெண்களின் பங்கு என்பது இந்தாண்டுக்கான மையக் கருத்து
  • நாட்டின் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன
  • டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்கிறார்.
New Delhi:

தேசிய அறிவியல் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளிகள், அறிவியல் மையங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பு என்பது இந்தாண்டு கொண்டாட்டத்துடைய மையக் கருத்தாக உள்ளது.

ராமன் விளைவு கண்டறியப்பட்ட பிப்ரவரி 28-ம் தேதியைத் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்த தினம், கடந்த 1986-ம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

புகழ்மிக்க அறிவியலாளரான சர் சி.வி. ராமனுக்கு ராமன் விளைவைக் கண்டுபிடித்ததால் 1930-ல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது. 

Advertisement

டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெறும் விழாவில் அறிவியல் துறையில் மகளிரின் பங்கு குறித்த நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு பிரபல பெண் அறிவியலாளர்களுக்குப் பரிசுகளை வழங்கி கவுரவிக்கிறார்

.

Advertisement

தேசிய அறிவியல் தினம்: இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடித்தந்த சர் சி.வி. ராமன்.  

தேசிய அறிவியல் தினம் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்:

Advertisement

1. தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்பத்திற்கான கவுன்சில் கடந்த 1986-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம்தேதி தேசிய அறிவியல் தினமாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. இதை அரசும் ஏற்று, அன்று தேசிய அறிவியல் தினத்தை அறிவித்தது.

2. அறிவியல் மற்றும் அதன் பயன்பாட்டை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதுதான் இந்த தேசிய அறிவியல் தினத்தின் நோக்கமாகும்.

Advertisement

3. முதன் முறையாக 1987, பிப்ரவரி 28-ம்தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

4. நடப்பாண்டில் 'அறிவியலில் பெண்களின் பங்கு' என்பது மையக்கருத்தாக இருக்கிறது. 

Advertisement

5. அறிவியல் மையங்கள், அறிவியல் ஆய்வகங்களில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை என்.சி.எஸ்.டி.சி. எனப்படும் அறிவியல், தகவல் தொழில்நுட்பத்திற்கான கவுன்சில் கவனிக்கிறது.

6. அறிவியலை பிரபலப்படுத்துதலுக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை கடந்த 1987-ம் ஆண்டு முதல் பரிசுகளை வழங்கி வருகிறது. 

7. ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதனைக் கண்டுபிடித்ததால் சர் சி.வி. ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1930-ல் வழங்கப்பட்டது. 

8. நாட்டிற்குப் பெருமை தேடித் தந்ததால் சர்  சி.வி. ராமனுக்கு 1954-ல் பாரத ரத்னா விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. 

Advertisement