C.V. Raman : சர் சிவி ராமன் அவர்கள் 1928 பிப்ரவரி 28 ஆம் தேதி 'ராமன் விளைவை' கண்டுப்பிடித்தார்
New Delhi: அறிவியலுக்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சிவி ராமன் (C.V. Raman), பிப்ரவரி 28,1928 –இல் ராமன் விளைவு என்னும் அறிவியல் கூற்றை கண்டுபிடித்தார். அதனை நினைவு கூறும் வகையில், இந்தியாவில் பிப்ரவரி 28 ஆம் தேதி தேசிய அறிவியல் தினமாக (National Science Day) கொண்டாடப்படுகிறது.
ராமன் விளைவு நியாபகமாக பிப்ரவரி 28 ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக இந்தியா அரசு 1987 ஆம் ஆண்டில் அறிவித்தது.
நம் வாழ்வில் தினமும் அறிவியலின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. அறிவியல் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களை கவுரவிக்கும் விதமாக தேசிய அறிவியல் தினத்தன்று பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
பல அறிவியல் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களின் புது கண்டுப்பிடிப்புகளை தேசிய அறிவியல் தினத்தில் நடக்கும் கண்காட்சியில் விவரிப்பார்கள்.
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தீம் வைப்பார்கள். அவ்வாறு இந்த ஆண்டு, ‘மக்களுக்காக அறிவியல், அறிவியலுக்காக மக்கள்' என்னும் தீம் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நவம்பர் 7,1888 ஆம் ஆண்டில் பிறந்த சிவி ராமன் (C.V. Raman ), இயற்பியல் துறையில் பல ஆராய்ச்சுகள் செய்துள்ளார். அவரது ராமன் விளைவுக்காக 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். அதன் பிறகு சிவி ராமன் அவர்களுக்கு இந்திய அரசு மிக உயரிய பாரத ரத்னா விருதினை 1954 ஆம் ஆண்டு வழங்கி கவுரவித்தது.