This Article is From Oct 27, 2018

“மத்தியில் நிலையான அரசு இல்லாவிட்டால் இந்தியாவுக்கு ஆபத்து”- அஜித் தோவல்

மத்தியில் நிலையான அரசு இல்லாவிட்டால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற சர்தார் படேல் நினைவு கூட்டத்தில் அஜித் தோவல் பேசினார்.

New Delhi:

நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் நினைவு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது-

இந்தியாவுக்கு நிலையான அரசு அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தேவை. அப்படி இருந்தால்தான் அரசியல், பொருளாதார இலக்குகளை இந்தியா அடையும். பலவீனமான அரசு மத்தியில் இருந்தால் அது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையும்.

இதற்கு சீனாவை ஓர் உதாரணமாக கூறலாம் 1970-களில் இந்தியாவை விட பொருளாதாரத்தில் பலவீனமான நாடாக சீனா இருந்தது. ஆனால் 2010-ல் உலகில் ஒரு முக்கியமான பொருளாதார சக்தியாக சீனா மாறிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இவ்வாறு பேசியுள்ளார்.

.