This Article is From Jan 25, 2019

தேசிய வாக்காளர் தினம் இன்று: தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

National Voter Day In India: நாடு முழுவதும் உள்ள வாக்காளர்கள் தேர்தல் நடைமுடையில் தங்களுடைய மேம்பட்ட பங்களிப்பை செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.  

தேசிய வாக்காளர் தினம் இன்று: தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

இந்தியாவின் தேர்தல் ஆணையம்  ஜனவரி 25 -1950 ல் நிறுவப்பட்டது.

1. தேசிய வாக்காளர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள வாக்காளர்கள் தேர்தல் நடைமுடையில் தங்களுடைய மேம்பட்ட பங்களிப்பை செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.  

2. சிறந்த தேர்தல் நடைமுறைகளுக்கான தேசிய விருதுகள் மற்றும் தேர்தலில் சிறப்பாக பணியாற்ற பணியாளர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படும். 

3. டெல்லியில்  தேர்தல் ஆணையத்தால் ஒருங்கிணைக்கப்படும் முக்கிய விழாவில் இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  சிறப்புவிருந்தினராக பங்கேற்பார்.

4. பங்களாதேஷ், பூட்டான், கசகஸ்தான், மாலத்தீவு, ரஷ்யா, மற்றும் ஶ்ரீலங்கா ஆகிய நாடுகளிலுள்ள தலைமை தேர்தல் ஆணையர்கள் இந்த விழாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்று ஏர் செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

5. இந்தியாவின் தேர்தல் ஆணையம்  ஜனவரி 25 -1950 ல் நிறுவப்பட்டது. அதன் நினைவாக இந்த நாளை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் முக்கிய நோக்கமே புதிய வாக்காளர்களை ஊக்கப்படுத்தி அவர்களை பதிவு செய்ய வைத்து அவர்களையும் ஜனநாயக கடமையை செய்ய வைப்பதேயாகும். 

6. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் யாரும் வாக்களிக்க வைப்பதே இந்த ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தின் கருப்பொருளாக உள்ளது. 

.