நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர் சரத் பவார் என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
Mumbai: 2022-ல் நடைபெறவிருக்கும் குடியரசு தலைவர் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை அனைதுத கட்சிகளின் வேட்பாளராக கருத வேண்டும் என்று சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
2022-ல் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறுகிறபோது தங்களது தரப்பில் குடியரசு தலைவரை தீர்மானிக்க போதிய பலம் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டடணி ஆட்சி நடந்து வருகிறது. இது ஏற்படுவதற்கு சரத் பவார் முக்கிய காரணமாக இருந்தார் என்பத குறிப்பிடத்தக்கது.
2022 குடியரசு தலைவர் தேர்தல் குறித்து சஞ்சய் ராவத் கூறுகையில், 'நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவராக சரத் பவார் உள்ளார். அவரை குடியரசு தலைவர் தேர்தலின்போது அனைத்துக் கட்சிகளின் வேட்பாளராக அவர் கருதப்பட வேண்டும்.' என்றார்.
சரத் பவாரை மற்ற அரசியல் கட்சிகள் குடியரசு தலைவர் வேட்பாளராக ஏற்குமா என்று சஞ்சய் ராவத்திடம் கேட்கப்பட்டதற்கு, அதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சஞ்சய் ராவத் கூறினார்.
இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், 'மற்ற கட்சிகள், நாட்டில் உள்ள மூத்த அரசியலை தலைவர்களை, அடுத்த குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பிருக்கிறது. 2022-க்குள், எங்கள் தரப்பிலிருந்து குடியரசு தலைவரை தேர்வு செய்ய எங்களுக்கு போதிய பலம் கிடைத்து விடும்' என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிர அமைச்சரவையில், உள்துறை, நிதித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் சரத் பவாரின், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது. இங்கு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சியில் இருந்து வருகிறது.