This Article is From Jun 18, 2018

இந்திய அளவிலான காலவரையற்ற லாரி ஸ்டிரைக் ஆரம்பம்..!

இந்திய அளவில் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் ஆரம்பமாகியுள்ளது

Advertisement
இந்தியா Posted by (with inputs from IANS)

Highlights

  • டீசல் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டிரைக் அறிவிப்பு
  • 90 லட்சம் லாரிகள் இந்த ஸ்டிரைக்கால் ஓடாது எனத் தகவல்
  • 60% வண்டிகள் இதில் பங்கேற்கு எனக் கூறப்பட்டுள்ளது

இந்திய அளவில் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் டீசல் விலை மற்றும் மூன்றாம் தரப்பு காப்பீட்டு பிரீமியம் அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஸ்டிரைக் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கங்களின் அனைத்து இந்திய கூட்டமைப்பின் தலைவர் சன்னா ரெட்டி, 'டீசல் விலையில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கும், மூன்றாம் தரப்பு காப்பீட்டுத் தொகை அதிகரிப்புக்கும் எதிராக இந்த ஸ்டிரைக்கை அறிவித்துள்ளோம். ஏறக்குறைய 90 லட்சம் லாரிகள் இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்கும். கிட்டத்தட்ட 60 சதவிகித வாகனங்கள் இந்த ஸ்டிரைக் மூலம் ஓடாது. டீசல் விலையேற்றம் குறித்து அரசிடம் கேட்டால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் தான் இதற்குக் காரணம் என்கிறது. ஆனால், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் அதிக வரி தான் விலை அதிகமாக இருப்பதற்குக் காரணம். காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி கொடுத்து 15 ஆண்டுகள் ஆகின்றன. இருப்பினும் மூன்றாம் தரப்பு காப்பீட்டு பிரீமியம் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் இருக்கின்றது. இது குறித்து சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்குத் தெரிவித்து பிறகும், எங்களது கோரிக்கைகளுக்கு செவி மடுக்க மறுக்கின்றனர்' என்று தகவல் தெரிவித்துள்ளார்.

பல்வேறு லாரி உரிமையாளர் சங்க அமைப்புகளும், பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளை ஜிஎஸ்டி வரி விதிப்பில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றன. மேலும், லாரி டிரைவர்களிடம் தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து வருவதாகக் கூறி காவல் துறைக்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர் லாரி உரிமையாளர் சங்கங்கள். 

 



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
Advertisement