Read in English
This Article is From Jun 17, 2018

காலத்தால் உறைந்த கிராமத்தின் ஆச்சரிய புகைப்படங்கள்

மீனவ மக்களின் இருப்பிடமாக இருந்த ஹவுடோவான் கிரமத்தில் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாததால், மக்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளனர்

Advertisement
விசித்திரம்
சீன நாடு சென்ங்ஷான் தீவில் பல மீனவ கிராமங்கள் உள்ளன. கடந்த 1900ஆம் ஆண்டு ஹவுடோவான் என்ற கிரமத்தில் இருந்து மக்கள் வெளியேறியுள்ளனர். மீனவ மக்களின் இருப்பிடமாக இருந்த ஹவுடோவான் கிரமத்தில் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாததால், மக்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளனர். மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் இந்த கிராமத்தை, இயற்கை அழகு சுழ்ந்துள்ளது. ஏஎப்பி செய்தி நிறுவனத்தின் புகைப்பட கலைஞர் ஜோகானஸ் ஏய்சேல் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரால் பகிரப்பட்டுள்ளது.
 

2,000 மீனவர்கள், 500 வீடுகள் இருந்த ஹவுடோவான் கிராமத்தில் தற்போது வெகு சில மீனவர்கள் மட்டும் தங்கி உள்ளதாக பிபிசி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
கடந்த 2015 ஆம் ஆண்டு, பச்சை தாவரங்களும் கொடிகளும் கிராமத்தின் பகுதியை சூழ்ந்துள்ளதை ‘தி டெய்லி மெயில்’ அறிக்கை வெளியிட்டுள்ளது. ஷாங்காய் நகரைச் சேர்ந்த கிங் ஜியான், என்ற புகைப்பட கலைஞர் சென்ங்ஷான் தீவின் புகைப்படங்களை வெளியிட்டார்.
 

அதனை தொடர்ந்து பல புகைப்பட கலைஞர்கள், ஹவுடோவான் கிராமத்திற்கு செல்வது வழக்கமானது, ‘காலத்தால் உறைந்த கிராமம்’ என இந்த கிராமத்தை அழைக்கின்றனர். தற்போது, சுற்றுலா இடமாக மாறியுள்ள ஹவுடோவான் கிராமத்திற்கு செல்ல அதிகாரிகள் நுழைவு கட்டணம் வசூலிக்கின்றனர்.
Advertisement