বাংলায় পড়ুন Read in English
This Article is From Apr 26, 2019

இந்திய போர்க்கப்பலில் பெரும் தீ விபத்து! கடற்படை அதிகாரி உயிரிழந்தார்!!

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பல் தீ விபத்தை சந்தித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement
இந்தியா Edited by

தீ விபத்து ஏற்பட்டிருக்கும் விக்ரமாதித்யா கப்பலின் மதிப்பு ரூ. 16 ஆயிரம் கோடி.

Karwar, Karnataka:

கர்நாடக துறைமுகத்திற்கு வந்த இந்திய போர்க்கப்பல் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் கர்வார் துறைமுகத்திற்கு ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா இன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை அணைக்கும் முயற்சியில் லெப்டினன்ட் கமாண்டர் டி.எஸ். சவுகான் ஈடுபட்டிருந்தார்.

இந்த முயற்சியில் எதிர்பாராத விதமாக புகை சூழ்ந்து அவருக்கு மூச்சுத் ணறல் ஏற்பட்டது. தீ விபத்து கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர், மயக்கமுற்ற அதிகாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துரிதமாக செயல்பட்டு கடற்படை அதிகாரிகள் பணியாற்றியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

ரூ. 16 ஆயிரம் கோடி மதிப்பீட்டி ரஷ்யாவிடம் இருந்து ஐ.என்.எஸ்.விக்ரமாதித்யா கப்பல் கடந்த 2014-ல் பெறப்பட்டது. இந்த கப்பல் 284 மீட்டர் நீளமும் 60 மீட்டர் உயரமும் கொண்டது. 40 ஆயிரம் டன் எடை கொண்ட ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா, இந்திய கடற்படையில் உள்ள மிகப்பெரும் கப்பலாகும்.

Advertisement