New Delhi: இன்று காலை ராஜ்யசபா துணை சபாநாயகர் தேர்தல் நடக்க உள்ளது. இதில், பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஒரு வேட்பாளரும், எதிர்கட்சிகள் சார்பில் ஒரு வேட்பாளரும் நிறுத்தப்பட உள்ளனர். தற்போது, நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், தேஜகூ-வின் வேட்பாளர் வெற்றி பெருவார் என்று எதிர்பாரக்கப்படுகிறது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தான், தேஜகூ-வின் வேட்பாளர் ஆவார்.
10 ஃபேக்ட்ஸ்:
‘எங்கள் கட்சி, ஐக்கிய ஜனதா தள கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு தரும்’ என்று நவீன் பட்நாயக் நேற்று அறிவித்தார்.
‘அமித்ஷா மற்றும் நிதிஷ் குமார் என்னுடன் போன் மூலம் உரையாடி ஆதரவு கேட்டனர்’ என்றுள்ளார் பட்நாயக். சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிஜூ ஜனதா தளம் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிவ சேனாவும் தேஜகூ-வின் வேட்பாளருக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளது. இது அரசியல் முக்கியத்துவம் அற்ற தேர்தல் என்பதால் இந்த முடிவு என்று சிவசேனா வட்டாரம் கூறியுள்ளது.
ராஜ்யசபாவின் மொத்த பலம் 244. பெரும்பான்மை பெற 123 எம்.பி-க்கள் ஆதரவு வேண்டும். ஆனால், இன்றைய வாக்கெடுப்பில் பலர் கலந்து கொள்ளமாட்டார்கள் எனப்படுகிறது.
மெஹுபூபா முஃப்டியின் பிடிபி கட்சி வாக்கெடுப்பிலிருந்து விலகி இருக்கப் போவதாக தெரிவித்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியைத் தவிர்த்து, அதிமுக, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, மற்றும் சுயேட்சை வேட்பாளர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என்று பாஜக தெரிவித்துள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் தேஜகூ-வுக்கு ஆதரவு கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் விஜய் கோயல், ‘எங்கள் பக்கம் தேவையான பலம் இருக்கிறது. ஹரிவன்ஷ் தனியொரு வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டால் நன்றாக இருக்கும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் உள்ளிட்டவை கூட்டாக இணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்த உள்ளது.
இவர்களைத் தவிர்த்து தெலுங்கு தேசம் கட்சியும் எதிர்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று நம்பப்படுகிறது.
காங்கிரஸின் ஆனந்த் ஷர்மா, ‘எங்களிடம் தன்னிகரற்ற வேட்பாளர் இருக்கிறார். தேஜகூ, அதன் கூட்டணியிலிருந்து விலகி ஆதரவு கோர வேண்டிய நிலைமையில் இருக்கிறது’ என்றுள்ளார்.