This Article is From May 29, 2019

5வது முறையாக முதல்வராக பதவியேற்றார் நவீன் பட்நாயக்; மோடியின் ஸ்பெஷல் வாழ்த்து!

1998 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தது பிஜூ ஜனதா தளம்.

ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம், மொத்தம் இருக்கும் 147 இடங்களில் 112 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • The 72-year-old is the longest-serving chief minister of Odisha
  • The oath - in a first - was held in full public view, outside Raj Bhavan
  • Mr Patnaik's party won 112 out of the 147 seats in the state election
Bhubaneswar:

ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அதில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் வெற்றி பெற்றது. இன்று அவர் அம்மாநில முதல்வராக பதவியேற்றார். பட்நாயக், ஒடிசாவின் முதல்வராக 5வது முறையாக பதவியேற்றுள்ளார். இதன் மூலம் மாநிலத்தில் அதிக காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

புபனேஷ்வரில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் மாநில ஆளுநர், கணேஷி லால், நவீன் பட்நாயக் மற்றும் அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு முன்னர் பட்நாயக், பதவியேற்கும் போது மிகவும் எளிமையாகவே பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால், இந்த முறை பொது மக்கள் மத்தியில் ராஜ் பவனுக்கு வெளியே அந்நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த பதவியேற்பு நிக்ழ்ச்சியில் சுமார் 7,000 பேர் கலந்து கொண்டனர். 11 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 9 அமைச்சர்கள், பட்நாயக்குடன் பதவியேற்றுக் கொண்டனர். 

ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம், மொத்தம் இருக்கும் 147 இடங்களில் 112 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் பிஜூ ஜனதா தளம்தான் ஆட்சியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 8 இடங்களிலும், பிஜூ ஜனதா தளம் 12 இடங்களிலும் வெற்றிவாகை சூடியுள்ளன. பதவியேற்பதற்கு முன்னர் புரியில் இருக்கும் ஸ்ரீ ஜகன்நாத் கோயிலில் தரிசனம் செய்தார் நவீன் பட்நாயக். 

பட்நாயக், தனது பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வின் வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, மோடிக்கு போன் மூலம் அழைத்து பட்நாயக் வாழ்த்து தெரிவித்தார்.
 

அதேபோல பட்நாயக், மீண்டும் ஒடிசா மாநில முதல்வராக பதவியேற்பது குறித்து ட்விட்டர் மூலம் பிரதமர் மோடி, “ஒடிசா முதல்வராக பதவியேற்கும் நவீன் பட்நாயக்கிற்கு வாழ்த்துகள். மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்ற அவருக்கும் அவரது குழவினருக்கும் எனது வாழ்த்துகள். ஒடிசாவின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்பதை உறுதிபட கூறிக் கொள்கிறேன்” என்று வாழ்த்து தெரிவத்துள்ளார். 

1998 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தது பிஜூ ஜனதா தளம். ஆனால், அதற்குப் பிறகு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடம் இருந்து பட்நாயக் விலகியே நிற்கிறார். இந்த முறை நடந்த மக்களவைத் தேர்தல் குறித்து முன்னர் பேசியிருந்த பட்நாயக், “நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காது. எனவே, எந்தக் கட்சி ஒடிசாவின் முன்னேற்றத்துக்குத் துணை நிற்கிறதோ அதற்கு ஆதரவளிப்பேன்” என்றார். 


 

.