சாவ்லா சித்துவுடனும், பஞ்சாப் முதல்வருடனும் உள்ள புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
New Delhi: முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்பியுமான நவ்ஜோத் சிங் சித்து தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கார்டர்பூர் காரிடார் அடிக்கல் நாட்டு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை பாராட்டி பேசியது சர்ச்சைக்குள்ளானது. தற்போது அதே நிகழ்வின் போது காலிஸ்தான் ஆதரவாளர் கோபால் சிங் சாவ்லாவுடன் எடுத்துள்ள புகைப்படம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாவ்லா சித்துவுடனும், பஞ்சாப் முதல்வருடனும் உள்ள புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இதற்கு பாஜக கடுமையாக கோபமடைந்துள்ளது. ''இது போன்று பாகிஸ்தான் மண்ணில் பேசுவது தவிர்க்கப்பட வேண்டும். சித்து இதுபோன்ற கூட்டங்களில் அவர்களிடம் ஒரு இடைவெளியை கையாள வேண்டும்'' என்று மத்திய அமைச்சர் அப்பாஸ் நாக்வி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ தலைமை ஜாவத் பஜ்வா, சாவ்லாவை வரவேற்றார். இந்த காரிடாரில் 4 கிமீ பாதை குருதாஸ்பூரிலிருந்து பாகிஸ்தான் எல்லை வரை நீள்கிறது. இங்கு தான் இந்தியாவின் பிரசித்தி பெற்ற குருத்வாரா எனும் குருநானக், தன் வாழ்நாளின் இறுதி நாட்களை கழித்த இடம் உள்ளது.
இம்ரான்கான் இந்த விழாவில் ''அமைதிக்கும், பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் எடுக்கும் முடிவுகள் இந்தியாவுக்கு கோபத்தை ஏற்படுத்துகின்றன'' என்றார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் சித்துவுக்கும், இம்ரானுக்கு நல்ல உறவு இருப்பதாகவும், அவரை பாகிஸ்தானில் போட்டியிட இம்ரான் அழைக்கலாம்'' என்று தெரிவித்தார்.