ஹவுடி மோடி நிகழ்ச்சியை தங்களது முதுகில் விரும்பி வரைந்துக்கொள்ளும் பெண்கள்.
Surat: நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை செப்.29-ல் தொடங்கி அக்.7-ம் தேதி வரை 10 நாள்களுக்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரிப் பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அங்கே, தாண்டியா, கர்பா ஆகிய நடனங்களை குடும்பத்துடன் ஆடி மகிழ்வார்கள்.
அந்தவகையில், இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையை கொண்டாட உடலில் வண்ண ஒவியங்களை வரைவது மிகவும் தனித்துவமான வழியாக மாறி வருகிறது. சூரத்தில் கொண்டாட்டங்களின் போது, சில பெண்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரது உருவப் படங்களை தங்களது உடலில் வரைந்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது.
மேலும், ஒரு சில பெண்கள் சந்திரயான்-2, சட்டப்பிரிவு 370 நீக்கம் உள்ளிட்ட நிகழ்வுகளை குறிக்கும் வகையில் தங்களது முதுகில் ஓவியங்களை வரைந்துள்ளனர்.
இதுதொடர்பாக ஒவியர் தர்ஷன் கூறும்போது, இளைஞர்கள் நவராத்திரி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தங்களது உடல்களில் வரையும் ஓவியம் மூலம் சமூகத்திற்கு கருத்து சொல்கின்றனர்.
இதற்காக புதிய போக்குவரத்து விதிகள், சந்திராயன் 2, சட்டப்பிரிவு 370 நீக்கம் உள்ளிட்ட நிகழ்வுகளை அவர்கள் ஓவியமாக வரைந்து வருகன்றனர் என்று அவர் கூறியுள்ளார்.