தனது மனைவியின் இறுதிச் சடங்கில் மகளுடன் பங்கேற்ற நவாஸ் ஷெரீஃப்(Nawaz Sharif)
ஹைலைட்ஸ்
- உயர்நீதிமன்ற தீர்ப்பை நவாஸ் ஷெரீஃப் கட்சியினர் வரவேற்றுள்ளனர்.
- உயர்நீதிமன்ற தீர்ப்பை நவாஸ் ஷெரீஃப் கட்சியினர் வரவேற்றுள்ளனர்.
- குற்றவாளிகள் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளனர்.
Islamabad: பனாமா பேப்பர்ஸ் வழக்கில் நவாஸ் ஷெரீஃப் மகள் மர்யமுக்கு கீழமை
நீதிமன்றம் அளித்த தண்டனையை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நிறுத்தி
வைத்துள்ளது. இதனால் அவர் விடுதலையாக உள்ளார்.
கடந்த 2016-ல் வெளிவந்த பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் நவாஸ் ஷெரீஃப்(Nawaz Sharif) மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. முறைகேடுகளாக
சொத்துகளை குவித்து, அதன் மூலம் வெளிநாடுகளில் சொத்து வாங்கியதாக
புகார்கள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக லண்டனில் ஃப்ளாட்டுகள்
வாங்கப்பட்டதாகவும், இதற்கு நவாஸின் மகள் மர்யம்தான் உரிமையாளர் என்றும்
புகார் கூறப்பட்டது.
இதனை விசாரித்த கீழமை நீதிமன்றம் மர்யமுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
விதித்தது. இதேபோன்று நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகளும், அவரது மருமகன்
சப்தாருக்கு ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள்
அனைவரும் அடியலா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த தீர்ப்புக்கு எதிராக மூவரும் இஸ்லாமாபாத் உயர்நீதி மன்றத்தில்
வழக்கு தொடர்ந்தனர். இதில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது மர்யமுக்கு
எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம்
மர்யத்தை விடுவித்துள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)