Islamabad: பாகிஸ்தானின் முன்னாள் பிரமதர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஷெரிப் ஆகியோர் இன்று கைது செய்யப்பட உள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் க்ராஃப்ட் வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று லாகூர் விமான நிலையத்துக்கு அவர்கள் வர உள்ளனர். அவர்களை கைது செய்யப்பட உள்ளதை ஒட்டி, பத்தாயிரத்துக்கும் மேலான போலீஸார் பாதுகாப்புக்காக லாகூர் விமான நிலைத்தை சுற்றி போடப்பட்டுள்ளனர்.
நவாஸ் ஷெரிப்பின் முஸ்லீம் நவாஸ் கட்சியினர், விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக தெரிய வந்ததை அடுத்து, அரசு தரப்பு லாகூருக்கு வரும் முக்கிய சாலைகளை முடக்கியுள்ளது.
லண்டனில் நிலம் வாங்கியது தொடர்பாக நவாஸ் ஷெரிப் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் கடந்த வாரம் நவாஸுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அவரது மகள் மரியமுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் விதித்தது குறிப்பிடத்தக்கது. வரும் ஜூலை 25 ஆம் தேதி பாகிஸ்தானில் தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.