ஹைலைட்ஸ்
- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்
- அவருக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
- நவாஸ் ஷெரீப் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள நிலையில், சிறுநீரகக் கோளாறால் பாதிக்கபப்ட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் பணத்தில் லண்டனில் சொகுசு வீடுகளை வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், சிறையில் உள்ள நவாஸ் ஷெரீப் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவிக்கையில், அவரது சிறுநீரகங்கள் செயலிழந்து வருகின்றன. இதனால் அவர் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரகக் கோளாறுக்கான அறிகுறிகள்
- கால்களில் வீக்கம் மற்றும் தொடர் வலி.
- தோல்களில் விடாத அரிப்பு மற்றும் தேமல்.
- உடல் உறுப்புகளில் நாள்பட்ட வீக்கம்.
- சிறுநீரின் நிறம் மாறுதல்.
- சிறுநீர் போகும் இடத்தில் வலி.
- வாயில் வித்தியாசமான சுவை உணர்தல்.