Read in English
This Article is From Jan 04, 2019

''அவரே பார்த்துக் கொள்ளட்டும், உதவியாளர் தரமுடியாது'' ஷெரிஃப் விஷயத்தில் பாகிஸ்தான் கெடுபிடி!

லாகூரில் உள்ள கோட் லாக்பாத் சிறையில் அஸிஜியா ஸ்டீல் மில் வழக்கில் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார் ஷெரிஃப்.

Advertisement
உலகம்

"இதற்கு காரணம் அவரது வழக்கு கொஞ்சம் முக்கியமான வழக்கு என்பதால் வேறுயாரையும் அனுமதிக்க விரும்பவில்லை" என்று பாகிஸ்தான் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார். (File)

Islamabad:

"பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் தானாகவே தனது சிறைச்சாலை அறையை பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த உதவியாளரையும் பணியமர்த்த முடியாது" என்று பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

லாகூரில் உள்ள கோட் லாக்பாத் சிறையில் அஸிஜியா ஸ்டீல் மில் வழக்கில் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார் ஷெரிஃப். அவருக்கு உதவி செய்ய ஆட்களை கோரியுள்ளனர்.

பாகிஸ்தான் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஷாகித் சலீம் பெக் ''பஞ்சாப் அரசு அவருக்கு எந்த உதவியாளரையும் வழங்காது. அவரே தான் அவரது வேலைகளை செய்ய வேண்டும்'' என்றார். 

"இதற்கு காரணம் அவரது வழக்கு கொஞ்சம் முக்கியமான வழக்கு என்பதால் வேறுயாரையும் அனுமதிக்க விரும்பவில்லை. அதனால் தான் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது" என்றார். 

Advertisement

ஷெரிஃப்பை சிறையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அவருக்கு எதாவது நிகழ்ந்தால் அது பாகிஸ்தானின் பெயரை கெடுக்கும் செயலாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

இவர் மீதும், இவரது குடும்பத்தார் மீதும் மூன்று வழக்குகள் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டன. இத்தோடு பனாமா பேப்பர்ஸ் வழக்கும் இவர் மீது இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement