हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 13, 2018

‘எதற்கும் தயார்..!’- கைது குறித்து முன்னாள் பாக்., பிரதமர் நவாஸ் ஷெரிப் கருத்து

பாகிஸ்தானின் முன்னாள் பிரமதர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஷெரிப் ஆகியோர் இன்று கைது செய்யப்பட உள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement
உலகம் ,

Highlights

  • அபுதாபியில் நவாஸ் ஷெரிப் வந்த விமானம் வெகு நேரம் நின்றிருந்தது
  • இன்னும் சற்று நேரத்தில் அவர் லாகூருக்கு வர உள்ளார்
  • நேரடியாக அவரை சிறைக்கு அழைத்துச் செல்ல வாய்ப்பு உள்ளது
Abu Dhabi:

பாகிஸ்தானின் முன்னாள் பிரமதர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஷெரிப் ஆகியோர் இன்று கைது செய்யப்பட உள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லாகூருக்கு வரும் அவரது விமானம் அபுதாபியில் 4 மணி நேரத்துக்கும் மேல் தாமதமானது. மாலை 6 மணியளவில் அவர் லாகூருக்குப் புறப்பட்டதாக கூறப்படுகிறது.

நவாஸ் ஷெரிப் மற்றும் மரியம் ஷெரிப் க்ராஃப்ட் வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று லாகூர் விமான நிலையத்துக்கு அவர்கள் வர உள்ளனர். அப்படி அவர்களும் வரும் பட்சத்தில் கைது செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை கைது செய்யப்பட உள்ளதை ஒட்டி, பத்தாயிரத்துக்கும் மேலான போலீஸார் பாதுகாப்புக்காக லாகூர் விமான நிலைத்தைச் சுற்றி போடப்பட்டுள்ளனர். 

நவாஸ் ஷெரிப்பின் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியினர், விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக தெரிய வந்ததை அடுத்து, அரசு தரப்பு லாகூருக்கு வரும் முக்கிய சாலைகளை முடக்கியுள்ளது. 

Advertisement

லண்டனில் நிலம் வாங்கியது தொடர்பாக நவாஸ் ஷெரிப் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் கடந்த வாரம் நவாஸுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அவரது மகள் மரியமுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் விதித்தது. வரும் ஜூலை 25 ஆம் தேதி பாகிஸ்தானில் தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த அரசியல் களேபரம் குறித்து நவாஸ் ஷெரிப், ‘முதலாவதாக என் விமானம் ஏன் இவ்வளவு நேரம் தாமதிக்கப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. அதுவே பல சந்தேகங்களை எழுப்புகிறது. அபுதாபியிலேயே என்னைக் கைது செய்தாலும் சரி, பாகிஸ்தானில் வைத்து என்னைக் கைது செய்தாலும் சரி, எதைச் சந்திக்கவும் நான் தயாராகவே இருக்கிறேன். கைது செய்யப்படுவேன் என்று தெரிந்தும் நான் பாகிஸ்தான் வருகிறேன் என்றால், எனக்குள் தீர்க்கமான எண்ணம் இருக்கிறது என்றுதான் அர்த்தம். அது மக்களுக்கும் தெரியும். ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் அனைத்து விஷயங்களையும் பாகிஸ்தான் மக்களுக்காத்தான் செய்கிறேன். என்னுடன் கை கோத்து வாருங்கள். நம் நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைப்போம்’ என்று கூறியுள்ளார். 

Advertisement
Advertisement