This Article is From Mar 12, 2019

14 முறை போட்டியிட்டுவிட்டேன், இந்த தேர்தலில் போட்டியிடவில்லை! - சரத்பவார்

மக்களவைத் தேர்தலில் சரத் பவார் போட்டியிட கோரி கட்சியினர் வலியுறுத்தி வருவதாகவும் இதுகுறித்து தான் யோசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்

என் குடும்பத்திலிருந்து இரண்டு நபர்கள் வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என சரத்பவார் அறிவிப்பு
  • 14 முறை போட்டியிட்டுவிட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
  • மாதா தொகுதியில் சரத்பவார் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
New Delhi:

வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மூத்த அரசியல்வாதியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (Sharad Pawar) போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக இந்திய முழுவதும் நடைபெறும் என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரம் காட்டிவருகின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் தங்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. ஏனென்றால் என்னுடைய குடும்பத்திலிருந்து இரண்டு நபர்கள் வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். இதனால் நான் இந்தத் தேர்தலில் நிற்க போவதில்லை. ஏற்கனவே 14 முறை தேர்தலில் போட்டியிட்டுவிட்டேன். அதனால், இந்த முடிவை எடுப்பதற்கு இது சரியான நேரம் என்று நினைக்கிறேன் எனக் கூறினார்.

இதனிடையே, தோல்வி பயத்தால், தேர்தலில் நிற்கவில்லையா என சரத்பவாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இதுவரை 14 தேர்தல்களை வெற்றியுடன் சந்தித்த நான், 15வது தேர்தலில் தோல்வி பெறுவேன் என்று நினைக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் தன்னை போட்டியிட கோரி கட்சியினர் வலியுறுத்தி வருவதாகவும் அதுகுறித்து தான் ஆலோசித்து வருவதாகவும் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, சரத் பவார் மகாரஷ்டிராவிலுள்ள மாதா தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

.