சிம்பா பட பாடலுக்கு மதுகர் குக்தே 63, மாணவிகளுடன் நடனம் ஆடினார்.
New Delhi: மகாராஷ்டிரா மாநிலம் பந்தாராவின் மக்களவை எம்.பியான மதுகர் குக்தே (63). இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். கடந்த சனிக்கிழமையன்று தனது தொகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அவர் அங்கு பள்ளி மாணவிகளுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து டிவிட்டரில் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், சினிமா பாடலுக்கு மதுகர் உற்சாகமாக நடனமாடுகிறார். இதைத்தொடர்ந்து, ஒரு சில மாணவிகளும் அவருடன் இணைந்து மேடையில் நடனம் ஆடுகின்றனர். அப்போது மேடையில் இருப்பவர்கள் அவர்ளை உற்சாகப்படுத்துகின்றனர்.
இதேபோல், மேடைக்கு முன்னால் அமர்ந்திருக்கும் மாணவர்களும் ஆர்வத்துடன் கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்துகின்றனர். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டது. இந்த வீடியோவானது தற்பொழுது வைரலாகி வருகிறது.