বাংলায় পড়ুন Read in English
This Article is From Nov 26, 2019

மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்: துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அஜித் பவார்!!

பாஜக அரசிலிருந்து விலகி சிவசேனாவுக்கு ஆதரவான தேசியவாத காங்கிரசுடன் அஜித் பவார் ஐக்கியமாக வேண்டும் என்று, சரத் பவார் தரப்பிலிருந்து அஜித்பவாரை வலியுறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement
இந்தியா Edited by
Mumbai:

மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளார். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அஜித் பவாரின் ராஜினாமா நடந்திருக்கிறது. 


பரபரப்பான அரசியல் சூழலில் மகாராஷ்டிராவின் முதல்வராக தேவேந்திர பட்னாவீசும், துணை முதல்வராக அஜித் பவாரும் கடந்த சனிக்கிழமையன்று பொறுப்பேன்றுக் கொண்டனர். 


இதனை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இதனை விசாரித்த நீதிமன்றம் மகாராஷ்டிர சட்டமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது. 

Advertisement


பாஜகவுடன் சேர்ந்த பின்னர், தனக்கு தனது கட்சியின் 54 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக அஜித் பவார் கூறினார். தற்போது அவரை தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அதன் தலைவர் சரத் பவார் ராஜினாமா செய்திருக்கிறார். 

தவிப் பிரமாணத்தை தொடர்ந்து நேற்று முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ், முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிகளை தொடர்ந்தார். இருப்பினும், அஜித் பவாரோ தனது துணை முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

Advertisement


இந்த நிலையில் இன்று மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மகாராஷ்டிர அரசு சார்பாக நடத்தப்பட்டது. இதில் அஜித் பவார் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


பாஜக அரசிலிருந்து விலகி சிவசேனாவுக்கு ஆதரவான தேசியவாத காங்கிரசுடன் அஜித் பவார் ஐக்கியமாக வேண்டும் என்று, சரத் பவார் தரப்பிலிருந்து அஜித்பவாரை வலியுறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement