Read in English
This Article is From Jun 01, 2018

சானிடரி நாப்கின் இயந்திரம் கல்வி நிறுவனங்களில் நிறுவ வேண்டும்: NCW

சானிடரி நாப்கின் பேட்களுக்கு இந்தியாவில் 12 சதவிகித வரி போடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Education

சுகாதாரமான நாப்கின் பேட்கள் எல்லா பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இருத்தல் வேண்டும் என்பதை தேசி பெண்கள் ஆணையம் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது

Highlights

  • 23% பெண்கள் பள்ளியிலிருந்து நிற்பதற்கு சுகாதாரமற்ற கழிப்பிடம் காரணம்
  • நாப்கின் பேட்களுக்கு 12% வரி போடப்படுகிறது
  • புனே கார்பரேஷன், அதன் பள்ளிகளுக்கு இலவச நாப்கின் பேட்களை வழங்குகிறது
New Delhi:

சானிடரி நாப்கின் பேட்கள் நாட்டில் இருக்கும் அனைத்து பள்ளி மட்டும் கல்லூரிகளில் இருக்கம்படி செய்ய வேண்டும் என்று தேசிய பெண்கள் ஆணையம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கும் கடிதம் எழுதியுள்ளது. 

தேசிய பெண்கள் ஆணையம் எழுதிய கடிதத்தில், `இந்தயாவில் பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளில் 23 சதவிகிதம் பேர் சுகாதாரமான சானிடரி நாப்கின் பேட்கள் இல்லாத காரணத்தினாலேயே படிப்பதை நிறுத்திக் கொள்கின்றனர். சுகாதார விஷயத்தில் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நாட்டின் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், அடிப்படை சுகாதார விஷயங்களைக் கூட சரிவர கடைபிடிப்பதில்லை. எனவே, சுகாதாரமான வகையில் நாப்கின் பேட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், உபயோகப்படுத்திய நாப்கின் பேட்களை எரிக்கும் வகையில் இன்சினரேட்டரையும் கல்வி நிறுவன வளாகத்திலேயே பொருத்த வேண்டும்' என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த விஷயம் குறித்து டி.என்.ஏ செய்தி நிறுவனம் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில், `பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகள் எந்த காரணத்திற்காக அவர்களின் கல்வியை பாதியிலேயே நிறுத்திக் கொள்கின்றனர் என்று ஆய்வு நடத்தினோம். அப்போது, சுகாதாரமான கழிப்பிட வசதியும், சுத்தமான நாப்கின் பேட்கள் இல்லை என்பதாலும் பெரும் அளவிலான பெண்கள் பள்ளிப் படிப்புக்கு முடக்கு போடுகின்றனர் என்பது தெரிய வந்தது. மாதவிடாய் காலங்களில் பெண் குழந்தைகளுக்கு சுத்தமான கழிப்பிடமும் நாப்கின் பேட்களும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இது பள்ளி சென்றால் கிடைக்காது என்பதால் வீட்டில் இருப்பது மேல் என்று நினைக்கின்றனர்' என்று தெரிய வந்துள்ளது.

சமீபத்தில், புனே கார்பரேஷன், தன் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளுக்கு இலவச நாப்கின் பேட்களை கொடுக்கும் முடிவை எடுத்துள்ளது. இதனால் 23,000 பெண் குழந்தைகள் பயன் பெறுவர் என்று கூறப்படுகிறது. சானிடரி நாப்கின் பேட்களுக்கு இந்தியாவில் 12 சதவிகித வரி போடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement