This Article is From Aug 31, 2018

வெள்ள பாதிப்பு: தேசிய பேரிடர் மீட்பு குழு நாகாலாந்து விரைந்தது

வெள்ள பாதிப்பால், முக்கியமான என்.எச் 29 நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் கிடைத்துள்ளன

வெள்ள பாதிப்பு: தேசிய பேரிடர் மீட்பு குழு நாகாலாந்து விரைந்தது
Kohima:

கடந்த ஒரு மாதமாக நாகாலாந்தில் பெய்து வரும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்கு, 12 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

வெள்ள பாதிப்பால், முக்கியமான என்.எச் 29 நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், வெள்ள பாதிப்பை சரி செய்ய நாகாலாந்து மாநிலத்திற்கு நிதி அளிக்க கோரி முதலமைச்சர் ரியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

எனவே, கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து, நாகாலாந்து முதலமைச்சர் நெப்யூ ரியோவிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

அதனை தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் தேசிய பேரிடர் மீட்பு குழு நாகாலாந்து விரைந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்

கடந்த வியாழக்கிழமை அன்று, வெள்ளம் பாதித்த இடங்களை முதலமைச்சர் ரியோ நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, பெரும்பாலான இடங்களில் நீர் வடியத் தொடங்கியுள்ளது எனவும், வெள்ள பாதிப்பு நிவாரண பணிகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்

.