This Article is From Aug 07, 2018

‘அவர்கள் பசுவைக் கொன்றார்கள், நாங்கள் அவர்களைக் கொன்றோம்!’- திடுக் ஆதார வீடியோ

பசுவதை செய்தார்கள் என்று குற்றம் சாட்டி இந்திய அளவில் பலரை ‘பசுக் காவலர்கள்’ தொடர்ந்து தாக்கி வரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன

HAPUR, ALWAR:

பசுவதை செய்தார்கள் என்று குற்றம் சாட்டி இந்திய அளவில் பலரை ‘பசுக் காவலர்கள்’ தொடர்ந்து தாக்கி வரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தாக்குதலுக்கு உள்ளான நபர்கள் பரிதாபமாக இறந்ததும் பல சமயங்களில் நடந்துள்ளன. இந்நிலையில், என்டிடிவி-யைச் சேர்ந்த நிருபர்கள் குழு பசுவதை தாக்குதலில் சம்பந்தப்பட்ட பலரை, அவர்களுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்தது. வீடியோவில் அவர்கள், கொலை செய்தது குறித்து பகிரங்கமாகவும் அப்பட்டமாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

உத்தர பிரதேச மாவட்டம், ஹப்பூருக்கு முதலில் நமது குழு சென்றது. அங்கு ஜூன் 18 ஆம் தேதி, காசிம் குரேஷி என்கிற நபர் பசுவதை செய்தார் என்று குற்றம் சாட்டி கொலை செய்யப்பட்டார். அதேபோல 65 வயதான சமயுதீன் கும்பலால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.&

la3rpke

இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீஸ் 9 பேரை கைது செய்தது. 9 பேரில் 4 பேர் தற்போது பிணையில் இருக்கின்றனர். அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராகேஷ் சிசோடியாவை நாங்கள் சந்தித்தோம்.

சிசோடியா நீதிமன்றத்தில் தனக்கும் நடந்த சம்பவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால், கேமராவிலோ வேறு கதை.

அவர், ‘நான் சிறை அதிகாரிகளிடம், அவர்கள் பசுவைக் கொன்றார்கள். நாங்கள் அவர்களைக் கொன்றோம் என்றேன். நான் சிறையிலிருந்து விடுபற்ற போது, என்னை அழைத்துச் செல்ல 3, 4 கார்கள் வந்தன. என் பெயரை சொல்லி வெளியில் இருந்தவர்கள் கோஷம் எழுப்பினர். என்னை அவர்கள் அப்படி வரவேற்றனர். எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. எனது படை தயாராக இருக்கிறது. யாராவது பசுவைக் கொன்றால் அவர்களை நாங்கள் கொல்ல தயாராக இருக்கிறோம். எங்கள் பக்கம் அரசு இருப்பதால், போலீஸும் எங்கள் பக்கம்தான் உள்ளது’ என்று பகிரங்கமாக பசுவதை தாக்குதல் சம்பவங்கள் குறித்து பெருமையாக பேசியுள்ளார்.

pehlu khan 650

இதையடுத்து, ஜெய்ப்பூரிலிருந்து மூன்று மணி நேரம் பயணம் செய்து பெரோர் டவுனுக்குச் சென்றது நமது குழு. இந்த இடத்தில் தான் பெஹூல் கான் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மாட்டை வாகனம் மூலம் எடுத்துச் சென்றதற்கு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் 9 பேரை கைது செய்தது. அனைவரும் தற்போது பெயிலில் வெளியில் இருக்கின்றனர்.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள விபின் யாதவ் பேசும்போது, ‘நாங்கள் பெஹூல் கானை ஒன்றரை மணி நேரம் விடாமல் அடித்துக் கொண்டே இருந்தோம். முதலில் 10 பேர்தான் இருந்திருப்போம். அப்புறம் கூட்டம் அதிகரித்துவிட்டது’ என்று பேசியுள்ளார்.

இந்த அதிர்ச்சியளிக்கும் வீடியோ ஆதாரம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.