600க்கும் மேற்பட்ட பறவைகள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Jaipur: ராஜஸ்தான் மாநிலம் குஜராத்தில் உப்பு நீர் ஏரியான சம்பர் ஏரியிலும் அதைச் சுற்றியுள்ள ஏரிகளிலும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் செத்து மடிந்துள்ளன.
மிகப்பெரிய உப்பு நீர் ஏரியான சம்பர் ஏரிக்கு ஆண்டு தோறும் வெளிநாடுகளிலிருந்து பறவைகள் புலம் பெயர்ந்து வருவது வழக்கம். அவ்வாறு வந்த பறவைகளே கிட்டத்தட்ட 17,000 பறவைகள் செத்து மடிந்துள்ளன. இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஷோவெல்லர், டீல், ப்ளோவர், மல்லர்ட் போன்ற 32 வகையான புலம் பெயர் பறவைகளில் 600க்கும் மேற்பட்ட பறவைகள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து இறந்த பறவைகள் பற்றிய விரிவான ஆய்வும் தண்ணீரில் உள்ள உலோக நச்சுத்தன்மை குறித்த தென்னிந்த ஆய்வகத்தின் அறிக்கைக்கும் அரசு காத்திருக்கிறது.
ஜெய்ப்பூர் சம்பர் ஏரி பகுதிக்கு பறவைகளை காப்பாற்ற 100க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய இருபது குழுக்கள் வருகை தந்துள்ளன. சுமார் 100 ஊழியர்கள் மாநில பேரிடர் படையின் குழுக்கள் பல தன்னார்வ குழுக்கள் மற்றும் அமைப்புகளும் பறவைகளை மீட்கும் பணிக்கு உதவுகின்றன.
இறந்த பறவைகளின் உடல்களை முறையாக அப்புறப்படுத்தி வருகின்றன. மீட்பு பணிக்கு பிறகு இறப்புகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.