This Article is From Nov 26, 2018

“அயோத்தியில் ராணுவம் தேவையில்லை; அமைதியை பாஜக பார்த்துக் கொள்ளும்”- வி.கே.சிங்

அயோத்தியில் இந்துத்துவ அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள மாநாட்டால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

“அயோத்தியில் ராணுவம் தேவையில்லை; அமைதியை பாஜக பார்த்துக் கொள்ளும்”- வி.கே.சிங்

அயோத்தி மாநாட்டில் பங்கேற்றவர்களின் ஒரு தரப்பினர்.

New Delhi/Ayodhya:

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சிவசேனா, வி.எச்.பி. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் இன்று மாநாடு நடத்துகின்றன. இதில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்புக்காக துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் ராணுவத்தை வரவழைக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.

அவருக்கு மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி.கே. சிங் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது- உத்தர பிரதேசத்தில் நடைபெறும் விழாவுக்கு ராணுவத்தை கொண்டு வர வேண்டும் என நான் நினைக்கவில்லை. அங்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்படுகிறது. மற்ற கட்சிகளைப் போல பாஜக இல்லை. சட்டம் ஒழுங்கை மாநில பாஜக பார்த்துக் கொள்ளும்.

இவ்வாறு வி.கே.சிங் கூறியுள்ளார். அயோத்தி மாநாட்டால் சிறுபான்மையினருக்கு ஆபத்து ஏற்படும் என்று பாஜகவுக்கு எதிரான கட்சிகள் கூறி வருகின்றன.
 

.