ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை வெற்றி: இந்தியாவில் உற்பத்தியை தொடங்க திட்டம்!(Representational)
New Delhi: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான சோதனைகள் உரிமம் வாங்கியவுடன் இந்தியாவிலும் சோதனை மேற்கொள்ளப்படும் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்த இந்திய பங்குதாரர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
AZD1222 என்ற அந்த தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளின் முதல் கட்டத்தில் சாதகமான முடிவுகளை கொண்டிருந்தது. இதுகுறித்து தி லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட சோதனை முடிவுகளின்படி, இது எந்தவொரு கடுமையான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை, ஆன்டிபாடி மற்றும் டி-செல் நோயெதிர்ப்பு மறுமொழிகளையும் வெளிப்படுத்தவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த தடுப்பூசி சிறிய பக்க விளைவுகளை ஏற்படுத்தியதாகவும், ஆனால் அதனை பாராசிட்டமல் எடுத்துக்கொள்வதன் மூலமே சரிசெய்து விடலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்களுடன் கூட்டு சேர்ந்துள்ள உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதர் பூனவல்லா கூறும்போது, சோதனைகள் "நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியுள்ளன, அதைப் பற்றி நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
"நாங்கள் ஒரு வார காலத்திற்குள் இந்திய ஒழுங்குமுறைக்கு சோதனை உரிமத்திற்கு விண்ணப்பிப்போம். அவர்கள் எங்களுக்கு அனுமதி அளித்தவுடன், இந்தியாவில் தடுப்பூசிக்கான சோதனைகளைத் தொடங்குவோம் என்றார். மேலும்,, விரைவில் தடுப்பூசியை பெருமளவில் தயாரிக்கத் தொடங்குவோம், "என்று அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்துக்கு முதல் மனித பரிசோதனையை இந்தியா தொடங்கிய நிலையில், லான்செட் ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. எய்ம்ஸ்-டெல்லி இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறுகையில், முதல் தரவுத் தொகுப்பு தொடர்பான முடிவுக்கு வருவதற்கு ஆராய்ச்சியாளர்கள் வருவதற்கு குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்தானது, உலகெங்கிலும் உருவாக்கப்பட்டு வரும் 100க்கும் மேற்பட்டவற்றில் ஒன்றாகும். இதன் சோதனையானது ஏப்.23ம் தேதி தொடங்கியது.
சீனா, அமெரிக்கா உட்பட மேலும், ஏழு நாடுகளில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான மருத்துவ பரிசோதனைகளும் நடந்து வருகின்றன.