This Article is From Dec 05, 2018

ஜெ., நினைவிடத்தில் அஞ்சலி… மீண்டும் என்ட்ரி கொடுக்கும் தீபா!

ஜெயலலிதாவின் 2வது நினைவு தினமான இன்று, மெரினாவில் இருக்கும் அவரது சமாதிக்கு வந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் தீபா

Advertisement
தெற்கு Posted by

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான ஜெ.தீபா, ‘ஜெ., மரணம் தொடர்பான விசாரணை முறையாக நடத்தப்பட வேண்டும்' என்று கோரியுள்ளார். ஜெயலலிதாவின் 2வது நினைவு தினமான இன்று, மெரினாவில் இருக்கும் அவரது சமாதிக்கு வந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் தீபா.

அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தீபா, ‘மக்களுக்காக ஜெயலலிதா செய்த நன்மைகளை யாரும் மறந்துவிட முடியாது. அதிமுக கட்சிக்காக, அவர் தனது வாழ்க்கையையே தியாகம் செய்தார். ஜெயலலிதா மரணம் குறித்தான விசாரணை, உண்மையாகவும் முழுமையாகவும் நடத்தப்பட வேண்டும். மக்களையும், அதிமுக தொண்டர்களையும் ஏமாற்றாத வகையில் விசாரணை இருக்க வேண்டும்' என்று கோரியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தீபாவின் கணவர் மாதவனும் உடனிருந்தார். முன்னர், ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் இன்று அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. அமைதி ஊர்வலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

Advertisement

அதிமுக-வைத் தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மெரினாவுக்கு அமைதி ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் தலைமையில் ஊர்வலம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

மேலும் படிக்க : “ஒரே நேரத்தில் தமிழகம் முழுக்க கூட்டம் வருமா..?”- தினகரனுக்கு சவால்விடும் ஆவடிக்குமார்

Advertisement